tamilnadu

img

மே 15 வரை பகுதி அளவில் ஊரடங்கு

மத்திய அரசிடம் கேரளம் வலியுறுத்தல்

திருவனந்தபுரம், ஏப்.27- மே 15 வரை பகுதி அளவிலான ஊரடங்கு தொடர வேண்டும் என்கிற கேரளத்தின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள் ளது எனவும், பின்னர் அப்போதைய சூழ் நிலையைப் பொறுத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என வும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திங்களன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

முந்தைய ஒரு வார காலத்தில் கொரோனா நோயாளிகள் புதிதாக கண்டறியப்படாத பகுதிகளில் ஊரடங்கை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கலாம். கூட்டம் சேராத வகை யில் தனி மனித இடைவெளியை பின்பற்றி பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கலாம். வெளி மாவட்ட, வெளி மாநில பயணங்கள் மே 15 வரை தவிர்க்க வேண்டும்.

புதிய நோயாளிகள் 13; குணமானோர் 13

கேரளத்தில் திங்களன்று 13 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. கோட்டயம் 6, இடுக்கி 4, பாலக்காடு, மலப்புறம், கண்ணூர் தலா ஒருவருக்கு நோய் உறுதியானது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர். ஒருவருக்கு நோய் எப்படி தொற்றியது என்பது ஆய்வு செய்யப்படுகிறது. மற்றவர்களுக்கு நெருங்கி பழகியவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட் டுள்ளது. கண்ணூர் 6, கோழிக்கோடு 4, திரு வனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புறம் தலா ஒருவர் என 13 பேர் நோயின் பிடியிலிருந்து விடுபட்டனர்.

கேரளத்தில் இதுவரை 481 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதில் 123 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். திங்க ளன்று மட்டும் 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கண்காணிப்பில் 20,301 பேர் உள்ளனர். 23,271 மாதிரிகள் இது வரை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

வெளி மாநிலங்களிலிருந்து...

பல்வேறு காரணங்களால் வெளி மாநி லங்களில் சிக்கிய மலையாளிகள் கேரளத் திற்கு அழைத்து வரப்படுவார்கள். இவர்களில் பலர் சிரமத்தில் உள்ளனர். உணவு கிடைக் காதவர்களும் தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றப்படும் நபர்களும் உள்ளனர். இவர்களை கேரளத்திற்கு அழைத்து வருவ தற்கான பணிகள் புதனன்று துவங்கும். அதற் கான வழிமுறைகளை நோர்க்கா பின்னர் அறி விக்கும். இவர்கள் கட்டம் கட்டமாக அழைத்து வரப்படுவார்கள். எல்லைகளில் சுகாதாரத் துறையின் பரிசோதனை நடத்தப்படும். இவர்களுக்கு கண்காணிப்பு கட்டாயமாக் கப்படும். வெளிநாடுகளிலிருந்து வருவோ ருக்கான அனைத்து முன்னெச்சரிக்கைகளும் இவர்களிடமும் பின்பற்றப்படும். எப்படி அவர் களை அழைத்து வருவது என்பது குறித்த வழி முறைகள் உருவாக்கப்படும். அனைவரும் இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண் டும். 

இவ்வாறு முதல்வர் கூறினார்.