tamilnadu

img

என்.ஆர்.சிக்கு எதிராக பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக பீகார் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அதன் 2010 வடிவத்திலேயே செயல்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.