tamilnadu

img

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வாலிபர்கள் இன்று போராட்டம்

சென்னை, ஜூன் 3-+1, +2 மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்க கோரியும், தமிழகத்தில் கட்டாயமாக இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் ஜூன் 4 ஆம்தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக சங்கத்தின்மாநிலத்தலைவர் என்.ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வகையில்சத்துணவு திட்டத்தை விரிவாக்க தமிழகஅரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திடவேண்டும்.நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் புள்ளிவிவரங்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வெறும் 10 சதவீதம் மட்டுமே அமலாகிறது என உண்மையைச் சொல்லி வருகிறது. வருகிற ஜூன் 06 ஆம் தேதிகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதை முறையாக நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேரும் குழந்தைகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது உடனடியாக தடுத்திட வேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுத்திடவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்கள் வாங்கும் கல்வி கட்டண விபரங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும் என அரசின் வழிகாட்டுதல் இருக்கின்றன.ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும் பகுதியான கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற தகவல் பலகை இல்லாத சூழல்உள்ளது. எனவே அரசு தகவல் பலகையில்பள்ளியின் அல்லது கல்வி நிறுவனத்தின்கட்டண விவரங்களை தெரிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.2019 புதிய கல்விக் கொள்கை வரைவுஅறிக்கையை கஸ்தூரிரங்கன் குழு தாக்கல் செய்துள்ளது. இதில் தனியார்கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக தங்கள்கல்வி கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் ஏற்கனவே இருக்கிறஇருமொழிக்கொள்கைக்கு மாறாக மும்மொழிக் கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கூறுகிறது. இந்தி திணிப்பை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடுமையாக எதிர்ப்பதோடு இதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கனவே 2500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை தமிழகஅரசாங்கம் மாணவர் எண்ணிக்கையைக்காரணம் காட்டி மூடியுள்ளது. மேலும் தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டஅரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தியா முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரம் பள்ளிகளை மூடுவதற்கு மத்திய அரசாங்கம்உத்தரவிட்டுள்ளது என தெரியவருகிறது. இதையும் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அதோடு அரசுப்பள்ளிகளில், பல சலுகைகள் கொடுத்த பின்பும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது அல்லது மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனில், அதை சரி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் கூடுதல் ஆசிரியர்களையும் தனித்திறமைகளை, ஊக்குவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு செய்திட வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஜூன் 04 செவ்வாயன்று தமிழகம் முழுவதும் கல்வியை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட உள்ளது.