மதுரையை சேர்ந்த ஏழை மாணவர்கள் பள்ளியில் முதலிடம் பிடித்திருக்கிறார்கள்.மதுரையில் டீ தூள் விற்பனை செய்யும் ராதாகிருஷ்ணனின் மகள்( மீனாட்சி) மற்றும் மகன்( சுந்தரராஜன்) இருவரும் தன் மனநல பாதிக்கப்பட்ட தாய்யை கவனித்து வருகின்றனர்.
மழை பெய்தால் ஒழுகும் வீடு,தன் புத்தகத்தை கூட வைக்க போதிய இடம் இல்லாத ,ஏழை கூலி தொழிலாளியின் மகள்,மகன் பல்வேறு சூழ்நிலைகளை கடந்து ,கிடைக்கும் நேரத்தில் நன்றாக படித்து 12 -வது வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்து,தன் தந்தைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
இவர்கள் பத்தாம் வகுப்பிலும் பள்ளியில் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதை பார்க்கும் போது கல்விக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்று தெரிகிறது.