tamilnadu

img

33 பச்சிளங்குழந்தைகள் உட்பட...

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

தமிழகத்தில் திங்கள்கிழமை  வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 1,173. செவ்வாயன்று 31 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 1,204 ஆக அதிகரித்துள்ளது. 1,204 பேரில் பத்து வயதிற்குட்பட்ட பச்சிளங்குழந்தைகள் 33 பேர். வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28,711, அரசு கண்காணிப்பில் உள்ளவர்கள் 135. 28 நாள் தனிமையை நிறைவு செய்தவர்கள் 68,519 பேர். 19,255 பேருக்கு ரத்தமாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாயன்று கொரோனா-வால் பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் ஆண்கள். 16 பேர் பெண்கள்.

அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 9 பேர், சென்னையில் 5 பேர். தஞ்சாவூரில் 4 பேர், தென்காசியில் 3 பேர் மதுரை, இராமநாதபுரம், நாகப்பட்டிணத்தில் தலா 2 பேர், கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரியில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பத்து வயதிற்குட்பட் 33 பச்சிளங்குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் பின்னடைவை சந்திக்கவில்லை. முன்னடைவைத்தான் காட்டுகிறது என்றார்.

;