tamilnadu

img

தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை  

பணிபுரியும்போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்றும் மிக வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.  

இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை, பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.  அலுவலகங்களில் பணிபுரியும்போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதி செய்திட தேவையான சூப்பர்வைசர்கள் அல்லது மேலாளர்களை நியமிக்க வேண்டும். பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைக்க வேண்டும். பணியிடங்களில் இடைவெளிவிட்டு மாற்றி அமைக்க முடியாத சூழலில் வெளிப்படையான திரைகள் மூலம் 2 மீட்டர் இடைவெளியை உறுதி செய்திட வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.