சென்னை, நவ. 7- வங்கக் கடலில், புல் புல் புயல் உருவாகியிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், மத்திய வங்கக் கடல் பகுதிக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறி வுறுத்தியிருக்கிறது. சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதி யில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்பொழுது புயலாக உரு வாகியுள்ளது என்றார். ‘புல் புல்’ என்று பெயரி டப்பட்ட இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச கரை நோக்கி நகரக் கூடும் என்றும் கூறினார். தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில், வெள்ளிக் கிழமை(நவ.8) முதல் 10ஆம் தேதி வரை வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்க ளில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பிருப்ப தாக, வானிலை மைய இயக் குநர் புவியரசன் கூறினார். சென்னையைப் பொருத்த வரை அடுத்த இரண்டு நாட் களுக்கு வறண்ட வானி லையே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.