tamilnadu

img

சிறுகுறு தொழில் நிறுவனத்திற்கான மின் கட்டணம் குறித்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்திடுக!

மின்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை

கோயமுத்தூர், ஏப்.20 -  சிறு, குறு தொழில் கூடங்கள் மே 6 ஆம் தேதிக்குள் மின் கட்ட ணம் செலுத்த வேண்டும் என்கிற அறிவிப்பை மின்சாரத்துறை அமை ச்சர் தங்கமணி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ,மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதா வது: தங்கள் துறையிலிருந்து தமிழகத்திலுள்ள சிறு, குறு தொழில் கூடங்களுக்கான மின்சார கட்டணங்கள் குறித்த  அறிவிப்பு வெளிவந்துள்ளன. அதன்படி மார்ச், ஏப்ரல் மாத மின் கட்டணங்கள் மே 6 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், கணக்கீட்டு பணி நடைபெறாததால், ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீடுபடி கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுத்திட ஊரடங்கு துவங்கிய மார்ச் 25ஆம் தேதியிலிருந்து இன்று வரை சிறு, குறு தொழிற்கூடங்கள், விசைத்தறி கூடங்கள் உள்ளிட்டவை இயங்காமல் உள்ளன. ஊரடங்கு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால், எதிர்வரும் நாட்களில் கடும் நிதி நெருக்கடியை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நிறுவன ங்கள் துவங்கப்பட்ட உடனே மின் கட்டணங்கள் கட்ட சொல்வது சரியானது அல்ல. இதனால் சிறு, குறு தொழிற்கூடங்கள் மேலும் கடும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படும். மேலும், உற்பத்தி நடைபெறாத  ஏப்ரல் மாதத்திற்கு உற்பத்தி முழு வீச்சில் இருந்த ஜனவரி, பிப்ரவரி மாத மின் கட்டணத்தை கட்டச் சொல்வது பொருத்தமானதும் அல்ல. சிறு, குறு தொழிற்கூடங்கள் உற்பத்தி துவங்கிய பிறகு, மின் கட்டணங்களை  தள்ளுபடி செய்வதா அல்லது தவணை முறையில் கட்டுவதா என்பது குறித்து தொழில் துறையினரிடம் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்வது தான் பொருத்தமாக இருக்கும். எனவே, மின் கட்டணங்கள் குறித்த தங்கள் துறை அறிவிப்பில் மாற்றங்கள் செய்து அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;