tamilnadu

img

ஐ.ஐ.டி. மாணவி மரணம் 3 பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன்

சென்னை, நவ. 18- ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு, 3 பேராசிரி யர்களுக்கு சம்மன் அனுப்பி யுள்ளது. மத்திய குற்றப்பிரிவு அலு வலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஐ.ஐ.டி.  பேராசிரியர்கள் 3 பேருக்கும்  சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூர் பிரிய தர்ஷினி நகரைச் சேர்ந்த அப்துல்  லத்தீப் மகள் பாத்திமா லத்தீப்,  சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் முதுநிலை முதலா மாண்டு படித்து வந்தார். இந்நிலை யில் பாத்திமா, விடுதியில் தான்  தங்கியிருந்த அறையில் கடந்த 8ஆம் தேதி தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் சாதாரண சட்டப்பிரி வின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இதில், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரி விக்கப்பட்டது. இந்த நிலையில், பாத்திமா வின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி.யில் பணிபுரியும் இணைப் பேராசிரியர் ஒருவர் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியர்கள் தன்னை மனரீதியாக துன்பு றுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்த தாக அப்துல் லத்தீப் குடும்பத்தி னர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக கோட்டூர் புரம் போலீஸார் மீண்டும் தீவிர  விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை பெரு நகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் ஐ.ஐ.டி. வளாகத்தில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர்  மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புல னாய்வுக் குழுவுக்கு வழக்கின் விசாரணையை மாற்றி உத்தர விட்டார்.

மத்திய குற்றப்பிரிவு வழக்கு: இந்த வழக்கின் விசாரணை அதி காரியாக மத்திய குற்றப்பிரிவு  கூடுதல் துணை ஆணையர் எஸ். மெக்லினா நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் உதவி ஆணை யர் பிரபாகரன், ஆய்வாளர் ஜெய பாரதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக் குழு கூடுதல்  காவல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி மேற்பார்வையில் செயல் படும். இந்நிலையில் பாத்திமா தற்கொலைத் தொடர்பாக மத்தி யக் குற்றப்பிரிவு அதிகாரிகள், புதிதாக ஒரு வழக்கை கடந்த வாரம் பதிவு செய்தனர். உள்மதிப்பீட்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த தன் விளைவாக ஏற்பட்ட மன  அழுத்தத்தில் பாத்திமா தற்  கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால், உள் மதிப்பீட்டு தேர்வில் மதிப்பெண்  அளிப்பதற்கு பேராசிரியர்கள் பின்பற்றும் நெறிமுறைகள் குறித்து மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை செய்து வருகின்ற னர்.

அதேவேளையில் பாத்திமா வுக்கு திட்டமிட்டு உள் மதிப்பீட்டுத்  தேர்வில் குறைவான மதிப்பெண்  வழங்கப்பட்டதா என்ற கோணத்தி லும் விசாரணை நடைபெறுவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரி விக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக கோட்டூர்புரம் காவ லர்கள் ஏற்கெனவே விசாரணை செய்த பேராசிரியர்கள், மாண வர்கள் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் 3 பேராசி ரியர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாத்திமாவின் செல்லி டப்பேசி தொடர்பான தடயவியல் துறை, சைபர் குற்றப்பிரிவு ஆகியவற்றின் அறிக்கை கிடைத்தால், வழக்கின் விசார ணையில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.