பால் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி, செப். 28- பால் உற்பத்தியாளர்களை சத்து அடிப்படையில் விலை என ஏமாற்றாமல், எம்ஆர்எஃப்ஐ கைவிட்டு ஐஎஸ்ஐ, லிட்டர் முறை யில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமது அலி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்க மாவட்ட கோரிக்கை பேரவை கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (செப்.28) நடை பெற்றது. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் பிரகாஷ் துவக்க உரை யாற்றினார். பால் உற்பத்தியாளர் கள் சங்க மாநில பொதுச் செய லாளர் முகமது அலி கோரிக்கை கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 12, 15 ரூ உயர்த்திக் கேட்டு வருகிறோம். பெரும் ஏமாற்றமாக அரசு அறிவித்ததோ 4 ரூ. 6 ரூபாய். ஆனால் இந்த சிறு உயர்வு கூட சங்கத்தின் 4 வருட தொடர் போராட்டத்தினால் தான் அறிவிக்கப்பட்டது. உண்மை யாக கிடைக்கும் உயர்வோ 2 ரூபாய் தான். பால் சத்துக் கணக்கு என கூறி ஏமாற்றப்படு கிறது. எம் ஆர் எஃப் ஐ கைவிட்டு ஐஎஸ்ஐ முறையில் ஆரம்ப சங்கங்களிலேயே சத்தை, அளவை குறித்து கொடுத்து விலை நிர்ணயிக்க வேண்டும்.வெளியில் போய் அளவிடுவதாக ஏமாற்றாமல் 2017 மதுரை நீதி மன்ற தீர்ப்பை மதித்து அமல்ப டுத்த வேண்டும்.
ஆவின் நிறுவனத்தில் நிலவும் ஊழல், ஊதாரித்தனத்தைத் தடுத்திட வேண்டும். அமைச்சர்க ளுக்கு நெருக்கமான கோவை நிறுவனத்துக்கு கிருஷ்ணகிரி ஆவின் நிர்வாகம் பால் வழங்கி யதில் நடைபெற்றுள்ள ஊழ லைத் தடுத்து ரூ. 3.5 கோடியை வசூலிக்க வேண்டும். தேவைப்ப டும் கூடுதல் பணியாளர்கள், அதி காரிகளை, ஆரம்ப சங்க பணி யாளர்களிலிருந்து முறையாக, வெளிப்படையாகத் தேர்வு செய்ய வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 நாட்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள பால் உற்பத்தியாளர்களின் கொள் முதல் பாக்கியை உடனடியாக நிர்வாகம் கொடுத்திட வேண்டும். தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சேர்த்து வழங்கி பால் கொள்முதலைத் தினமும் 50 லட்சம் லிட்டர் அதி கப்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியாளர்களையும், நிர்வா கத்தையும் மேலும் உயர்த்த வேண்டும்.தீபாவளிக்கு நமத்துப் போன தனியார் பட்டாசை வாங்க வேண்டும் என அமைச்சர்களும், அதிகாரிகளும் பால் உற்பத்தி யாளர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு முகமது அலி கூறி னார்.