tamilnadu

img

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புயல்களுக்கு பலியானோர் 359 பேர்

சென்னை,நவ.26- 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 10  ஆண்டுகளில் வீசிய நிஷா, தானே, வர்தா,  ஒக்கி, கஜா ஆகிய 5 புயல்களால் தமிழ்நாட்டில்  மொத்தம் 359 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கஜா புயல் தொடர்பான ஆய்வறிக் கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை யம், தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில் 10 ஆண்டுகளில் புயல்கள், அதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய  தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்  வருமாறு:- தமிழ்நாட்டில் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு  6 பெரிய புயல்கள் உருவாகின. 2005 ஆம்  ஆண்டில் மட்டும் பியார், பாஸ், பனூஸ்  என 3 புயல்கள் உருவாகி சேதத்தை உரு வாக்கின. அதன்பின்னர் 10 ஆண்டுகளில் வீசிய 5 புயல்கள் பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்தின. 2008-ல் நிஷா புயல் உருவாகி 102 கிலோ மீட்டர் வேகத்தில் காரைகால் பகு தியை தாக்கியது. இதில் 189 பேர் உயிர் இழந்தனர்.

2011 ஆம் ஆண்டில் வீசிய தானே புயல்  கடலூர், புதுச்சேரி பகுதியில் பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியது. இந்த புயல் 38 பேரின்  உயிரை  பறித்தது. 2016-ல் உருவான வர்தா புயலில் 22 பேரும், 2017 ஆம் ஆண்டு வீசிய ஒக்கி புய லில் 42 பேரும் உயிர் இழந்தனர். கன்னியா குமரி மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்ப டுத்திய இந்த புயலில் 185 மீனவர்கள் காணா மல் போனார்கள். ஒக்கி புயலைத் தொடர்ந்து வீசிய கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தியது. இதில் 52 பேர் இறந்தனர். 2008-ல்  இருந்து இதுவரை 10 ஆண்டுகளில் வீசிய நிஷா, தானே, வர்தா, ஒக்கி, கஜா ஆகிய 5  புயல்கள் தமிழ்நாட்டில் மொத்தம் 359 உயிர்  களை பலிகொண்டுள்ளது. எனவே, தேசிய பேரிடர் மேலாண்மை வாரி யம் வழங்கியுள்ள பரிந்துரைகள் வருமாறு:-

புயல் சேதங்களை தடுப்பதற்காக அரசு  முன்னதாகவே அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியின் விவரங்களை முன்னுரிமை அடிப்படையில் சேகரித்து வைக்க வேண்டும். மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படைகள் போன்றவற்றை வலுப்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு பணியில் தகுந்த பயிற்சி பெற்ற வர்களை ஈடுபடுத்த வேண்டும். நிவாரணப் பொருட்களை கொள்முதல் செய்தல், எடுத்துச் செல்லுதல், பங்கிடுதல் ஆகிய வற்றில் தனித்துவமான செயலாக்க முறையை ஏற்படுத்த வேண்டும். பேரிடரின் போது பாதிக்கப்படும் குடும் பத்தினருக்கு தேவையான பொருட்களை முன்னதாகவே பொட்டலமாக வைத்து இருக்க வேண்டும். மீனவர் குடும்பங்களுக்கு கடும்பாதிப்பு ஏற்படும். எனவே அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று  வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.