tamilnadu

img

தில்லி சொல்வது என்ன? - எம்.அகமது உசைன்

இதை நான் எழுதும் போது, பலி எண்ணிக்கை 43 ஆகி விட்டது. இன்னும் பல பேர் கவலைக்கிடம். என்கிற செய்தி ஆங்கில ஊடகங்கள் தெரி வித்துக்கொண்டிருக்கின்றன.  பிப். 27-ஆம் நாள் ஆங்கில இந்து பத்திரிகை தனது முன் பக்க தலைப்புச் செய்தியில், ‘நான்கு நாட்கள் வன்முறைக்குப் பிறகு மத்திய, மாநில அரசுகள் மிகவும் துரிதமாக செயல்பட்டு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது’. 

அஜித் தோவல் மேலும் கூறும் போது,“நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. மக்கள் திருப்தியடைந்துள்ளனர். சகஜ நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுபவர்கள் மீது நம்பிக்கையுள்ளது. காவல்துறை தனது கடமைகளை செய்கிறது. மேலும் உசாராக உள்ளனர்.” என கதை அளக்கிறார். அப்போது ஒரு மனிதர் அஜித் தோவலிடம், எங்கெல்லாம் முஸ்லிம்கள் குறைவாக இருந்தார்களோ அங்கெல்லாம் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றார். அதையும் அவர் கேட்டுவிட்டு அமைதியாக சென்றார்.

எப்படி கலவரம் நின்றது?

காவல்துறை கலவரத்தை அடக்கி இயல்பு நிலை திரும்பியது என்பது உண்மை யா? கலவரக்காரர்கள் தாங்களாகவே தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள். ஆம். மத்திய அரசும், பாரதீய ஜனதா கட்சி யும் முடிவு செய்து கலவரம் நின்றது. மத்திய  அரசிடம், ராணுவம், காவல்துறை வரிசை யில் ஆர்எஸ்எஸ்சும் உள்ளது. அது அடி என்றால் அடிக்கும். நிறுத்து என்றால் நிறுத்தும். இப்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. காவல்துறை அவர்களின் ஏவல் துறையாக மாறிவிட்டது. இது தான் உண்மை. காரணம், வட கிழக்கு தில்லியின் ஜாப்ராபாத், மெளஜ்பூர், சாந்த் பாக், குர்ஜி தாஸ், பவன்புரா ஆகிய இடங்களில் கலவரம் துவங்கிய 23-ஆம் தேதி காவல் துறைக்கு உதவி கேட்டு அபயக் குரலாக வந்த அழைப்பு கள் சுமாராக 700. 24-ஆம் தேதி வந்தது 3500, 25-ஆம் தேதி 7500. 26-ஆம் தேதி 1500. மொத்தமாக வந்த அழைப்புகள் 13200. இது காவல்துறை தெரிவித்தது தான். ஆனால் எந்த அழைப்புகளும் காவல்துறையால் கண்டுகொள்ளப்பட வில்லை.

வெறிப் பேச்சுக்களும் வெறியாட்டங்களும்

23-ஆம் தேதி பெரும்பாலான பத்திரிகை களின் தகவல் மையங்கள் குஜராத்தின் அக மதாபாத்தில் டிரம்ப் நிகழ்ச்சியில் இருந்தன. இந்த தேதியை அவர்கள் திட்டமிட்டு தேர்வு  செய்தனர். இதற்கு தயாரிப்புகள் பல நாட்க ளாக மேற்கொள்ளப்பட்டன. தில்லிக்கு வெளியேயிருந்து கலவரக்காரர்கள் கொண்டுவரப்பட்டு கச்சிதமாக அரங்கேற்றப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா போன்றவர்கள் சாகீன் பாக் போராட் டத்தை மையமாக வைத்து தில்லி தேர்த லின் போதும் அதற்குப் பிறகும் நடத்திய வெறியூட்டும் பேச்சுக்களும், அதை ஒட்டி அந்த பகுதிகளில் மூன்று நாட்களாக தொடர்ந்து மூன்று சங்பரிவார் வன்முறை யாளர்கள் துப்பாக்கியால் சுட்டதும், குடி யுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்கார இளை ஞர் ஒருவர் காயமடைந்ததும் உதாரணம்

அது மட்டுமல்ல 26-ஆம் தேதி நடுஇரவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி திட்டமிட்டு மறுக்கப்பட்டது. நீதி கேட்டு அவர்கள் சார்பாக சில வழக்க றிஞர்கள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீ தரை அணுகியபோது, அவர் மற்ற ஒரு நீதி பதியையும் அழைத்து ஒரு உயர்நீதிமன்ற அமர்வாக மாற்றி காவல் தலைமை அதிகாரி யை அவசரமாக அழைத்து உடனடியாக பாதுகாப்பும் மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.  நீதிபதிகள் காவல்துறை தலைவரிடம் இந்த கலவரத்திற்கு காரணம் பா.ஜ.க தலை வர்களின் வெறிப்பேச்சுதான். அவர்களின் மீது நடவடிக்கை எடுத்தீர்களா? அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தீர்களா? என்று சரமாரியாக கேள்வி கேட்டனர். அப்போது அவர், அவர்கள் பேசியது தனக்கு தெரியாது என்றார். மிகவும் கோபம் கொண்ட நீதி அரசர், அந்த வெறிப்பேச்சை அங்கேயே போட்டுக் காட்டினார். 

இது இணையதளங்களிலும் ஊட கங்களிலும் வருவது உங்களுக்கு தெரியா தா? கபில் மிஸ்ரா ஆத்திரமூட்டி பேசுகிற போது அவரது அருகில் நின்ற உங்கள் உயர் காவல் உதவியாளர் உங்களிடம் சொல்ல வில்லையா? என்று கேட்டதும் மெளனமாகிப் போனார்கள் தில்லியின் உயர் காவல் அதிகாரிகள். இது குறித்த நடவடிக்கை சம் பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறிய நீதிபதி இரவோடு இரவாக (அடுத்த அமர்வுக்கு முன்) மாற்றப்படுகிறார். ஆக, ஆக்கலும் அழித்தலும் எல்லாம் அவர்களே

மதக்கலவரமாக மாற்றும் முயற்சி தோல்வி

இதை இந்து - முஸ்லிம் கலவரமாக மாற்ற முயற்சித்தனர். மத்திய அரசும், பா ஜ க வும் துவக்கத்திலிருந்தே குடியுரிமை சட்ட போராட்டத்தை இந்துக்களுக்கும் முஸ் லிம்களுக்குமான போராட்டமாக மாற்ற முயற்சித்து, இது முஸ்லிம்களின் பிரச்சனை, மற்றவர்கள் அவர்களுடன் செல்ல மாட்டார் கள் என்று எண்ணினார்கள். ஆனால் மதச்சார்பற்ற மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க வன்முறை யின்  மூலமாக இந்து- முஸ்லிம் கலவரமாக மாற்ற எண்ணினர். ஆகவே தில்லிக்கு வெளியேயிருந்து சங்பரிவார் கலவரக்கா ரர்கள் இந்த பகுதிகளுக்கு வந்து இரும்புக் கம்பிகளாலும், ஹாக்கி மட்டை களாலும், நாட்டு துப்பாக்கிகளாலும் அடித்தும் சுட்டும் கொன்றுள்ளனர்.

கலவரத்துக்கிடையிலும் மக்கள் ஒற்றுமை

பல இந்துக்கள் முஸ்லிம்களை பாது காத்துள்ளனர் என்கிற செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சீக்கியர்கள் குருத்வா ராக்களை திறந்து வைத்து முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். தலித் மக்கள் சாலையின் குறுக்கே அரணாக நின்று தடுத்துள்ளனர். இதில் ஒரு சில இந்துக் களும் கொல்லப்பட்டுள்ளனர். அப்படி கொல்லப்பட்ட இந்துக்களை கொன்றது முஸ்லிம்கள் என்று திசை திருப்ப முயற்சிக் கிறார்கள்.  சி வி விஹாரை சேர்ந்த பிரேம் காந்த் பாகலே என்ற இந்து ஒருவர் தீவைக்கப்பட்ட வீட்டினுள் சென்று ஆறு பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு மற்ற இந்துக்களோடு அனுப்பி வைத்துவிட்டு மறுநாள் தான் அவர் மருத்துவமனை சென்று தனக்கு சிகிச்சைக்கு அட்மிட் ஆனார். இது போல் பல இந்துக்கள் உதவி செய்ய போய் காயம டைந்துள்ளனர். 

பைசல் பரூக் என்பவர் நடத்தும் ராஜ தானி என்ற பள்ளி தீக்கிரையாக்கப்பட்டது. அவரின் வாகன ஒட்டியும் காவலாளியும் தாக்கப்பட்டு 60 மணி நேரம் அந்த தீ வைக்கப்பட்ட கட்டடத்திலேயே பூட்டப்பட்டு இறந்து போயிருப்பார்கள் என்று சென்று விட்டனர். அவர்கள் இருவரும் இந்துக்கள் தான். இதுபோன்று பல செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இப்படித்தான் மக்கள் ஒற்றுமையும் மத நல்லிணக்கவும் பாதுகாக்கப்படுகிறது. அதனால் தான் மற்ற இடங்களில் மதக்கலவரம் பரவவில்லை. இதில் மத்திய அரசும், பாஜகவும் படுதோல்வி அடைந்துள்ளன.

புது யுக்திகள்

இம்முறை கலவரத்தில் ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளனர். இணைய தளத்தில் தனியார் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதில் தனியார் துறை மூலமாக செயல்படுத்தப்படும் தகவல் மையத்திலி ருந்து ஒரு வாகன எண்ணை அடித்தால் உரி மையாளர் பெயர் தெரிந்துவிடும். அப்படி கலவரப்பகுதிகளில் நிறுத்தப்பட்ட அல்லது நிறுத்திவிட்டு ஓடிவிட்டவர்கள் வாகனங்கள் யாருடையது என்று தெரிந்து கொண்டு கொளுத்தினார்கள். இதில் பெயர் மாற்றம் செய்யாத, செய்தும் மாறாத இந்துக்களின் வாகனங்களும் கொளுத்தப்பட்டன. ஏராள மான பொருட்களை திருடினார்கள். 1948  லிருந்து முஸ்லிம் வீடுகளை அடையாளப் படுத்தி தாக்கினார்கள். ஆனால் இம்முறை இந்துக்கள் காவி கொடியேற்றவேண்டும்; இல்லையென்றால் அவர்களும் தாக்கப்படு வார்கள் என்று எச்சரித்தனர். வன்முறை தாக்குதலின் முதல் நாள் கொல்லப்பட்ட காவலர் ரத்தன்லால் கலவரக் காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தவர். அவரது உடலில் குண்டுக் காயங்கள் இருந்தது கவனிக்கப்படவேண்டியதாகும்.

அதுபோல காவல்துறையினரே கலவரக் காரர்களை தங்களது இரு சக்கர வாகனங்க ளில் அழைத்து செல்வதும் சிசிடிவி காமிராக்களை உடைப்பதும் ஊடகங்களில் வெளிவந்தன.

காவல்துறை,  மத்திய அமைச்சர்களின் அறிக்கைகள்

26-ஆம் தேதி வன்முறையாளர்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் வலம் வரும்போது தில்லியின் உயர் போலீஸ் அதி காரியின் செய்தி தொடர்பாளர் எம்.எஸ்.ரந்தாவா நிலைமையை கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொன்னார். அப்போது கல வரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டும் கல்லெ றிந்தும் இருமசூதிகளை இடித்துக்கொண்டு மிருந்தனர். இவைகளை எல்லாம் அம்ப லப்படுத்திய நீதிபதி இரவோடு இரவாக நாள் குறிப்பிடப்படாமல் மாற்றம் செய்யப்படு கிறார். அது பதினைந்து நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது என்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.  கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், வன்முறை வெறியாட்டத்தை கண்டிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 1984 கலவரத்தில் கறை படிந்தவர்கள் இதில் கருத்து சொல்லக்கூடாது என்று எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாத பிரதான எதிர்க் கட்சியை குறை சொல்வதன் மூலம் திசை திருப்பப் பார்க்கிறார். இவர்களுக்கு இந்த துயரம் ஒரு பொருட்டல்ல என்பது தான்.

ஆம் ஆத்மி ,  அரவிந்த் கெஜ்ரிவால்

சென்ற மாதம் தில்லி மக்கள் பெருவாரி யாக வாக்களித்து வெற்றிபெறச் செய்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால், உயர்நீதிமன்ற நீதிபதி தலையிட்டு கலவரப் பகுதியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று சொன்னபிறகே செல்கிறார். தனக்கு பெரு வாரியாக வாக்களித்த முஸ்லிம் மக்களை பாதுகாக்க இத்தகைய இக்கட்டான சூழலில் எதிர்பார்த்த அளவுக்கு முனைப்பாக இல்லாத கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் அம்மக்கள் ஏமாற்றப்பட்டதையே காட்டுகிறது.

ஆக, இம்மாதிரிப்பட்ட தலைவர்கள் இடதுசாரி கட்சி தலைவர்கள் போல் உண்மை யாகவும் விசுவாசமாகவும் இருக்கமாட்டார் கள் என்பது தில்லி கலவர பாடம் உணர்த்து கிறது. ஆக அரசு இயந்திரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய பாஜக அரசு தன்னுடைய பாசிச அரசியலுக்காக மக்கள் விரோத, சிறுபான்மை அழிப்பு என்ற திட்டத்தை மேலும் மேலும் அமல்படுத்தும். நீதிமன்றங்களை நிர்மூலமாக்கும். மக்கள் தாங்களே முன்வந்து அனைவரும் எந்த வேறுபாடுமின்றி ஒன்றுபட்டாலொழிய தங்களை தாங்களே பாதுகாக்க முடியாது என்பது தான் தில்லி கலவரம் உணர்த்தும் படிப்பினை.

கட்டுரையாளர் : மாநில பொருளாளர், 
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு




 

;