tamilnadu

img

பஞ்சாப்பில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் பரிமாற்றம் - காவல்துறை வழக்கு பதிவு  

பஞ்சாப்பில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல் பரிமாற்றம் செய்து கொண்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப்பில் உள்ள  ஜலந்தரின் ஸ்ரீமன் என்ற தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக பாக்வாராவில் வசித்து வந்த பிரப்லீன் சிங் மற்றும்  ஜலந்தரின் மாடல் ஹவுஸில் வசிக்கும் மோகன் லால் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், பிரப்லீன் சிங் நவம்பர் 19 ஆம் தேதி ஸ்ரீமேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நவம்பர் 20 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்தனர். மருத்துவமனையில் இருந்து உறவினர்களுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளனர். அவர்களும், அவரது உடலை தக்வாரா தகன மைதானத்தில் தகனம் செய்துள்ளனர். இந்த நிலையில், தவறாக வேறு ஒருவரின் உடல் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பொழுது தந்தையின் உடல் அங்கிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகனம் செய்யப்பட்ட உடல் ஜலந்தரின் மாடல் ஹவுசில் இருந்த டார்செம் லால் என்பவரது என்பவரது சடலம். அவரும் ஒரு கொரோனா நோயாளியாவார். இது மருத்துவமனையின், கவனக்குறைவால் தான் நடந்துள்ளது என டார்செம் லாலின் மகன் மோகன் லால் காவல்துறையினர் புகார் அளித்துள்ளார். இரண்டு புகார்களும் சட்ட பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து ஜலந்தர் காவல்துறையினர் ஐபிசி யின் பிரிவு 297 கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

;