tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முறையீடு பாதியில் நிறுத்தப்பட்ட அரசுப் பள்ளியின் கட்டிடப் பணி மீண்டும் துவக்கம்

உதகை, ஆக. 17- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முறையீட்டால் குந்தா பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்ட அரசு துவக்கப்பள்ளியின் கட்டிடப் பணி கள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குந்தா பகுதி யில் மின் வாரியத்திற்கு சொந்த மான இடத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி யில் வகுப்பறை பற்றாகுறை நிலவி வந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலங்க ளவை நாடாளுமன்ற உறுப்பின ரான டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய வகுப்பறைகளுக்கான கட்டி டப்பணிகள் துவக்கப்பட்டன. இந்நி லையில், நாடாளுமன்ற உறுப்பி னர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திடீரென நிறுத்தப்படுவதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அப்பணி கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

இருப்பினும், எந்த வொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இதையடுத்து இப்பள்ளிக் கட்டி டம் கட்டுவதற்காக நிதி ஒதுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டு, மஞ்சூரில் கூடினர். இதையறிந்து சம்பவ இடத் திற்கு வந்த உதகை ஊராட்சி ஒன் றிய பொறியாளர் விஜயலட்சுமி மற்றும் மஞ்சூர் காவல் உதவி ஆய் வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், செவ்வாய்க் கிழமை முதல் மீண்டும் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடை பெறும் என்றும், மூன்று மாத காலத் திற்குள் வேலை முழுவதும் முடிக்கப் படும் என்றும் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்த னர். முன்னதாக, இப்பேச்சுவார்த் தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்டக்குழு உறுப்பி னர் கே.ராஜேந்திரன், உதகை இடைக்குழு செயலாளர் எல்.சங்கர லிங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் டி.அடையாள குட்டன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அலியார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;