tamilnadu

img

குன்னூரில் வாகனப் பார்க்கிங் தளத்திற்கு சீல்

உதகை,ஜன.23- குன்னூரில் குத்தகை பணம் தராத நகராட்சி வாகனப் பார்க்கிங் தளத்திற்கு  சீல் வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள விபி தெருவில், நகராட்சியின் கட்டண வாகன பார்க்கிங் தளம் உள்ளது. இந்த பார்க்கிங் தளத்தை நகராட்சி குத்தகைக்கு விட்டி ருந்தது. இந்நிலையில் குத்தகை எடுத்த நபர் நகராட்சிக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ரூ.19 லட்சம் வரை செலுத்தப்படாமல் இருந்துள்ளார். இதனால் வியாழ னன்று பார்க்கிங் தளத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

;