tamilnadu

img

உதகை: கொரோனா தடுப்புக் கவச உடைகளை இழுத்து செல்லும் குரங்குகள்

உதகை,

ஜூலை 22- உதகையில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பயன் படுத்தும் பாதுகாப்பு கவச உடை களை (பிபிஇ கிட்) குரங்குகள் இழுத்துச் செல்லும் வீடியோ வெளி யாகி பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா  தொற்று மிக வேகமாக பரவி வருவதால் நோயாளிகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவ மனையில் போதிய இடவசதி இல்லாததால் மாவட்ட நிர் வாகம் சில தனியார் பள்ளிகளை தற் காலிக மருத்துவமனையாக பயன் படுத்துகிறது

இந்நிலையில்,  உதகை  அருகே உள்ள லாரன்ஸ் பள்ளியின் ஒரு பகுதி கொரோனா  சிகிச்சை மையமாக கடந்த திங்கட் கிழமை முதல் செயல்பட்டு வருகிறது

தற்போது இங்கு  50க்கும் மேற்பட்ட கொரோனா நோய்தொற்றினால்  பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த மையத்தில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் மற்றும்   சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோர் பயன்படுத்திய  பாதுகாப்பு கவச உடைகள் (பிபிஇ கிட்) முறையாக அழிக்கப் படாமல் வளாகத்தில் குவித்து வைக் கப்பட்டுள்ளது.

அவற்றை வனத் திற்குள் இருந்து வெளியேறிய குரங் குகள்  தூக்கி கொண்டு பிற இடங் களுக்கு செல்கின்றன. இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ பொதுமக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் இந்த உடைகளில் இருக்கும் கிருமிகள் மக்களுக்கு பரவுவதுடன், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுக்கும்  பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே,  மருத்துவர்கள் மற்றும் சுகா தாரத் துறையினர் பயன்படுத்தும் சுய  பாதுகாப்பு கவசங்களை உரிய வழிகாட்டுதல்படி அழிக்க   மாவட்ட நிர்வாகம்  உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணிகண்டன் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தியுள்ளனர்.

;