உதகை, அக்.14- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா விடுதிகள் மூடல் மற்றும் பிளாஸ் டிக் பொருட்கள் தடை ஆகிய பிரச்சனைகளில் அணுகுமுறை களை முறைப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ் கரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர் வாகம் எடுத்து வருகிறது. மாவட் டத்தின் இயற்கை வளத்தை பாது காக்க எடுக்கப்பட்டு வரும் இந் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அதேநேரம், சூழல் பாதுகாப்பிற் காக அமலாக்கப்படும் சட்ட நடை முறைகளில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. அண்மையில் உதகை, கோத்த கிரி, அதிகரட்டி, குன்னூர், மசினகுடி ஆகிய பகுதிகளில் தனியார் விடுதி கள் பலவற்றையும் மாவட்ட நிர் வாகம் மூடி சீல் வைத்ததுள்ளது. நீல கிரி மாவட்டத்திற்கு வரும் ஏராள மான சுற்றுலா பயணிகள் தங்குவ தற்கு இந்த விடுதிகள் பெரிதும் பயன்படுகின்றன. எனவே, திடீ ரென இத்தகைய விடுதிகளை மூடா மல் ஒரு முறை அனுமதி அளித்து வரன்முறைப்படுத்தும் முறையி லான நடைமுறையை மாவட்ட நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும். அதை விடுத்து சீல் வைத்து மூடுவது என்பது சரியான அணுகுமுறை யாக இருக்காது. மேலும் பல இடங்களில் பெரும் பணக்காரர்க ளுக்கும், செல்வாக்கு மிகுந்தவர்க ளுக்கும் சொந்தமான விடுதிகள் தடையில்லாமல் இயங்கி வரு கிறது. இத்தகைய இரண்டு வித மான அணுகுமுறைகளால் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந் துள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல இடங்களில், சமீபத்தில் கட்டி முடிக் கப்பட்ட கட்டிடங்கள் விதி மீறிய கட்டிடங்கள் என இடிக்கப்படு கின்றன. மாவட்டம் முழுவதும் எந்த வொரு கட்டிடம் கட்ட வேண்டு மென்றாலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள குழுவிடம் தான் ஒப்புதல் வாங்க வேண்டு மென்ற நடைமுறை அமலில் இருப் பதால், நீண்ட காலமாக பலரால் அனுமதி பெற முடியாத நிலை உள் ளது. எனவே இத்தகைய கடுமை யான விதிகளை தளர்த்தாமல், ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக அனுமதியை வழங் காமல் வீடுகளை விதி மீறல் என்ற பெயரால் இடிப்பது தீர்வாகாது. இதேபோல், பிளாஸ்டிக் பொருட்களும், குடிநீர் பாட்டில் களும் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. இது வரவேற்கக் கூடியஅம்சமே என்றா லும், உள்ளூர் தயாரிப்புகளுக்கு மட்டுமே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறதேயன்றி பன்னாட்டு நிறுவனங்களின் பல பொருட்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் மட்டுமே வருகின்றன. இதனால் உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சூழல் பாதுகாப்பு என்ற பெயரால் எடுக்கப்படும் இத்த கைய நடவடிக்கைகளில் ஒரு ஒருங் கிணைந்த அணுகுமுறையை மாவட்ட நிர்வாகம் கையாள வேண்டும். மேலும், இது குறித்த போதுமான விழிப்புணர்வு பிரச் சாரத்தையும் மாவட்ட மக்களிடம் கொண்டு செல்ல விரிவான முயற்சி எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக் குழுவின் சார்பில் கேட் டுக் கொள்வதாக அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.