tamilnadu

அரசு மானியத்துடன் பசுந்தீவன உற்பத்தி - விவசாயிகளுக்கு அழைப்பு

உதகை, செப். 13- அரசு மானியத்துடன் பசுந்தீவன உற்பத்தி செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசெண்ட் திவ்யா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, நீலகிரியில் மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2020-21 ன் கீழ் அரசு மானியத்துடன் தீவனப்பயிர் சாகுபடி மூலம் பசுந்தீவன உற்பத்தி மேம்படுத்தப்பட உள்ளது. நீலகிரியில் கறவைப் பசுக்களின் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கக் கால்நடை வளர்ப்போரிடம் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை கால் நடை பராமரிப்புத்துறை ஊக்கப்படுத்துவதுடன், மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2020-21 இன் கீழ் அரசு மானி யத்துடன் தீவனப்பயிர் சாகுபடி மூலம் பசுந்தீவன உற்பத்தி  மேம்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் 30 சதவீதத் திற்கும் குறையாமல் (ஆதிதிராவிடர் 29 சதவிகிதமும், பழங்குடியினர் 1 சதவிகிதமும்) பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதுடன் பெண்களுக்கும், ஆவின் மூலம் பால்  விநியோகம் செய்யும் பயனாளிகளுக்கும், பதிவு செய்யப் பட்ட கோசாலாக்களுக்கும், சிறு மற்றும் குறு விவசாயி களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். நீலகிரியில் 35  ஏக்கர் நிலப்பரப்பில் 100 சதவீத மானியத்தில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில் மறுதாம்பு தீவனச்சோளம், வேலிமசால், தீவனப்புல் கரணைகள், ஆப்பிரிக்கன் நெட்டை மக்காச்சோளம், தீவன தட்டைப் பயிறு ஆகியன சாகுபடி செய்ய தீவன விதைகள் வழங்கப்பட உள்ளன. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகக் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;