tamilnadu

உதகையில் ஒட்டுநர் பணி வாய்ப்பு

உதகை, ஜூன் 4-நீலகிரி மாவட்ட குடும்ப நல செயலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  கனரக வாகன ஓட்டுநர் உரிமம், இரண்டு வருட முன் அனுபவம், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வாகன பராமரிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் தெரிந்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு காலமுறை ஊதியம் 19500-62000 ஆகும். வயது 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஓட்டுநர் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜுன்19ஆம் தேதிக்குள் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றின் நகலுடன் விண்ணப்பிக்கவும்.