துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். 990 பேர் காயமடைந்துள்ளனர் என ஏஎப்ஏடி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், 147 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
மேற்கு துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் 994 பேர் காயமடைந்துள்ளனர். இதில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பேராக்லி கொண்டாட்டம் நடந்துள்ளது. கூட்டம் அதிகமாக காணப்பட்ட அந்த இடத்தில் இருந்து இடிபாடுகளில் இருந்து 3 வயது சிறுமியும், 14 வயது சிறுவனும் மீட்கப்பட்டுள்ளார். வெள்ளியன்று பிற்பகலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் பலியானார்கள்.
துருக்கியில் இருவரை 1,464க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. இதில், 44 நிலநடுக்கங்கள் 4 ரிக்டர் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே, துருக்கியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கிழக்கு மாகாணங்களாக எலாசிக் மற்றும் மாலத்யாவைத் தாக்கியதில் 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.