tamilnadu

img

இந்நாள் டிச. 24 இதற்கு முன்னால்

1936 - லுகேமியா என்னும் ரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையிலிருந்த ஒரு 28 வயதுப் பெண்ணுக்கு, பாஸ்பரஸ்-32 கதிரியக்க அணுக்கருவைச் செலுத்தி, கலிஃபோர்னிய மருத்துவர் ஜான் லாரன்ஸ் சிகிச்சையளித்தார். மனிதர்கள் மீதான இந்த முதல் அணுக்கரு சிகிச்சையை மேற்கொண்ட அவரே அணுக்கரு சிகிச்சையின் (நியூக் ளியார் மெடிசின்) தந்தை என்று போற்றப்படுகிறார். அணுக்கரு சிகிச்சை என்ற முயற்சி, 1920களின் இடைப்பகுதியில் ஜெர்மனியில், ஹங்கேரிய கதிரியக்க வேதியி லாளரான ஜார்ஜ்-டி-ஹெவசி என்பவரால்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது.

எலிகளுக்குள் கதிரியக்க அணுக்கருவினைச் செலுத்தி, அவற்றின் உடலியக்கத்தை இவர் கண்காணித்ததே, கதிரியக்கக் கண்காணிப்புக்கான தொடக்கமாக அமைந்தது. 1934இல் ஐரீன்-ஜோலியட்-கியூரி(மேரி கியூரியின் மகள்), அவர் கணவர் பிரடரிக் ஜோலியட் கியூரி ஆகியோர் செயற்கையாக கதிரியக்க அணுக்கருவை உருவாக்கியது, இத்துறையின் வளர்ச்சியில் மிகமுக்கிய முன்னேற்றமாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு 1935இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜார்ஜ்-டி-ஹெவசி-க்கும் கதிரியக்கக் கண்காணிப்பு முறையை உருவாக்கியதற்காக 1943இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1971இல் அமெரிக்க மருத்துவக் கழகம், அணுக் கரு சிகிச்சையை ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவாக அங்கீகரித்தது. எக்ஸ்-ரே கதிரி யக்கமே முதன்முறையாக, உயிருடன் உள்ள மனித உடலின் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்ய உதவியது.

எக்ஸ்-ரே உள்ளிட்ட ஆய்வுகளிலும், புற்றுநோய் போன்றவற்றி ற்குச் செய்யப்படும் கதிரியக்கச் சிகிச்சைகளிலும், உடலின் வெளிப்புறமிருந்து கதிரியக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால், அணுக்கரு சிகிச்சையில், கதிரியக்க அணுக் ்கரு உடலுக்குள் செலுத்தப்பட்டு, உள்ளிருந்து வெளிப்படும் கதிரியக்கம் கண்கா ணிக்கப்படுவதன்மூலம், பிறவகையிலான அனைத்து மேம்பட்ட (சிடி, பிஇடி, எம்ஆர்ஐ) ஆய்வு முறைகளையும்விட தெளிவான தகவல்கள் பெறப்படுகின்றன. உடலுக்குள் பெரும்பாலும் ஊசி மூலம் செலுத்தப்படும் கதிரியக்க அணுக்கரு, குறிப்பட்ட பாதை வழி யாகச் செல்லும்படியோ, அல்லது குறிப்பிட்ட உறுப்பில் சேகரமாகும்படியோ செய்யப்படு கிறது. இதன்மூலம், உள்ளுறுப்புகளைப் பற்றிய தெளிவான தகவல்கள் மட்டுமின்றி, செல்களின் செயல்பாடுகள்வரை கண்காணிக்க முடிவதால், நோயின் தோற்றுவாய் குறித்தே அறிய முடிவதுடன், நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல் எவ்வாறு வினையாற்றுகிறது என்பதையும்கூட அறிய முடிகிறது. பொதுவாக நோய்கள் உடலின் உட்பகுதியில் தோன்றக்கூடியவையாக இருப்பதால், தொடக்க நிலையிலேயே அறிய முடிவது, முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கவும், தெளிவான தகவல்கள் இருப்பது பொருத்தமான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.

- அறிவுக்கடல்