tamilnadu

img

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம்

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இப்பகுதியில் பல நிலத்தட்டுகள் அமைந்துள்ளன. இந்தத் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் நியூசிலாந்தில் இன்று சுமார் 33 கிலோ மீட்டர் ஆழத்தில்  நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 5.9 ஆக  பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.