tamilnadu

img

கொரோனாவின் மோசமான தாக்கத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை....  உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் வேதனை  

ஜெனீவா 
கொரோனா தாக்கம் மோசமான நிலையில் உள்ளதாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது. அதன் வீரியத்தை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளவில்லை என  உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

அசியோசியேட் பிரஸ்ஸிடம் அவர் கூறியதாவது:-
கொரோனா பரவல் மோசமான நிலையில் உள்ளதாகத்தான் எங்களுக்குத் தெரிகிறது. அது தணியவில்லை.  பல நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிதாக்கத் தொடங்கியுள்ளன. இது தொற்று நோயைப் பற்றிய புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.கொரோனா பாதிப்பானது கடந்த 1918-ஆம் ஆண்டு ப்ளூ காய்ச்சலால் 100 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை விட ஆபத்தானது.  தற்போது நம்மிடமுள்ள மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் கொரோனா பேரழிவைத் தடுக்க முடியும். ஆனால் கொரோனாவின் தாக்குதலை அதன் வீரியத்தை பெரும்பாலான மக்கள் இன்னும் புரிந்துகொள்வில்லை என்றார்.
மேலும் அசோசியேட் பிரஸ் எழுதியுள்ள செய்தியில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள புள்ளி விவரங்களின்படி, கொரோனா கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்களைப் பாதித்துள்ளது 1,66,000- க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என்பதை  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஏன் நம்புகிறார் எனத் தெரியவில்லை. அதே நேரத்தில் ஆப்பிரிக்கா வழியாக எதிர்காலத்தில் நோய் பரவுவதற்கான வாய்ப்பை  உள்ளது என்பதை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்,  இந்தியாவில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் சோதனைகளுக்கும் கொரோனா வைரஸ் எண்ணிக்கைக்குமான இடையேயுள்ள வலுவான தொடர்பு அதிகரிக்கும். சோதனைகள் அதிகரித்தால் தொற்றின் எண்ணிக்கையும் உயரக்கூடும். ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட ஆய்வக சோதனை தரவுகளின்படி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 23 பேரில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு ஜனவரியில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து நான்கு லட்சம் பேர் (மக்கள் தொகையில் 0.02 சதவீதம்) பரிசோதிக்கப்பட்டனர். ஏப்ரல் 20-ஆம் தேதி நிலவரப்படி 17,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளது.
 

;