tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜிஜின்பிங் பாராட்டு

சுய வலிமை பெற்று முன்மாதிரியாகத் திகழும் நபர்களையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் முன்மாதிரிகளையும் பாராட்டும் 6ஆவது தேசிய மாநாடு, மே 16-ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமன்றத்தில் நடைபெற்றது. சீன ஜனாதிபதி ஜிஜின்பிங், இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதோடு, சீனாவின் மாற்றுத்திறனாளி இலட்சியத்தை முன்னேற்றுவதற்காக, அவர்கள் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.