நியூசிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு காட்சிகளை மகிழ்ச்சியாக பகிர்ந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தவன், சிறுவர்கள் உள்பட கண்ணில் பட்டவர்களை யெல்லாம் சுட்டதில் 51 பேர் உயிரிழந்தனர். அதை பேஸ்புக்கில் நேரலையாகவும் பகிர்ந்தான். இந்நிலையில், பிலிப் நெவில்லே ஆர்ப்ஸ் என்ற இளைஞன் இந்த வீடியோவை ‘பெரும் உற்சாகம்’ எனக் கூறி மகிழ்ச்சிகரமாகப் பகிர்ந்தான். இதே வாக்குமூலத்தை நீதிபதி யிடமும் தெரிவித்த அவனுக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.