tamilnadu

img

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை நெருங்குகிறது... 

நியூயார்க் 
வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அந்நாட்டில் மார்ச் 16-ஆம் தேதி கொரோனா வைரஸ் வேகம் எடுத்தது. கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மாறாக பரவல் வேகம் மின்னல் வேகத்தில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 975 பேர் பலியாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா டெஸ்ட்கள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் விரைவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டும் சூழல் உருவாகியுள்ளது.

;