tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்பு... ஐ.நா.மக்கள் நிதியம் தகவல்

ஜெனீவா:
கொரோனா ஊரடங்கு காரணமாக பெண்கள் கருத்தடை சாதன வசதியை இழந்துள்ளனர், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிடுமென ஐ.நா மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
உலகளவில் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் ஐ.நா மக்கள்தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கொரோனா பரவலால் வருமானம் குறைந்த நாடுகளில், அதிகளவில் சுகாதார மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை.இதனால் குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 50 மில்லியன் பெண்கள் நவீன கருத்தடை பயன்பாட்டை இழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி (யு.என்.எஃப்.பி.ஏ) தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியால் ஏராளமான பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை அணுக முடியவில்லை. இது தேவையற்ற, விருப்பமில்லாத கர்ப்பங்களுக்கு வழிவகுக்கும்.  

இதனால் 70 லட்சம்  பெண்கள் கருத்தரிக்க வாய்ப்புள்ளது,  குடும்பக் கட்டுப்பாட்டுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் போது மில்லியன் கணக்கான பெண்கள் தங்கள் உடலையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கத் தவறிவிடுவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவடைய வாய்ப்புள்ளது. இதை இடையிலேயே தடுத்து நிறுத்த ஐ.நா சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது.
70 லட்சம் பெண்கள் கருத்தரிக்க வாய்ப்புள்ள நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுகளில் 1.30 கோடி குழந்தை திருமணங்கள் நடைபெ Sourceறலாம். பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள், பிற வகையான சுரண்டல்களும் வேகமாக அதிகரிக்கும்.  ஊரடங்கு ஆறு மாதம் நீடித்தால் 3.10 கோடி அளவிற்கு சமூகங்களுக்கு இடையிலான பாலின பாகுபாட்டை அதிகரிக்கும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் பெண்கள் மீதான பயங்கரமான விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றன. இந்த தொற்றுநோய் சமூகங்களுக்கு இடையிலான பாகுபாட்டை அதிகமாக்குகிறது. என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் நிர்வாக இயக்குனர் நடாலியா கனெம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், புள்ளிவிவரங்கள் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அவெனீர் ஹெல்த் மற்றும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

-நியூஸ் கிராப் இணைதள தகவல்களிலிருந்து....
 

;