ராஜமலையில் தொழிலாளர் குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன - 11 பலி; 80 பேரின் கதி என்ன?
இடுக்கி,ஆக.07- இடுக்கி மாவட்டம் ராஜமலைப் பகுதியில் பெய்த தொடர்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் மீட்கப் பட்டு மூணாறு டாடா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். மேலும் 55 பேரைத் தேடும் பணி தொடர்கிறது. இறந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள் 1 குழந்தை ஆகி யோர் அடங்குவர். இடுக்கி மாவட்டம் கண்ணன் தேவன் தேயிலைத்தோட்டத்தைச் சேர்ந்த நெய்மக்காடு பெட்டிமுடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளியன்று அதிகாலை 4 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது எனக்கூறப்படுகிறது. ஆனால் காலை 6 மணிக்கு மேல்தான் ஊர்மக்கள் நிலச்சரிவு குறித்த செய்தியை அறிந்துள்ளார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த குடியிருப்புப் பகுதிகள் (லைய ன்கள்) மண்ணுக்கடியில் புதைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் 20 வீடுகளை மண் மூடிவிட்டது. மொத்தம் 80 பேர் வரையில் மண்ணுக் குள் சிக்கியிருக்கலாம் என்று முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவிக் கின்றன.
குன்று சரிந்து வீழ்ந்து நிலச்சரிவு
நிலச்சரிவு ஏற்பட்ட அதேநேரத் தில் மூணாறு பெரியவாரைப் பகுதி யில் உள்ள பாலம் முற்றிலுமாகச் சேதமடைந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. மறையூர் உள்பட பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மூணாறு ராஜமலைப் பகுதியில் மூன்றரை கிலோ மீட்டர் உயரத்தி லிருந்து குன்று சரிந்து வீழ்ந்தத னால் நிலச்சரிவு ஏற்பட்டதாக வரு வாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்த னர். அந்தப் பகுதி முழுவதும் பிளந்து ஆறுபோல் காட்சியளிக்கிறது. ஊர் பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவர் குழுக்கள்-மீட்புப்பணி
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோட்டயம், எர்ணாகுளம் மாவட்ட ங்களிலிருந்து மருத்துவர் குழுக்களை அனுப்பியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா டீச்சர் தெரிவித்தார். இடுக்கி மாவட்ட நடமாடும் மருத்து வர் குழு ஏற்கனவே இப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது. மீட்புப் பணி களுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு வினரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள னர். திருச்சூர் மாவட்டத்திலிருந்து மேலும் ஒரு மீட்புக் குழுவினர் ராஜ மலை பகுதிக்கு வந்து சேர்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 15 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத் திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில் மேலும் மருத்துவக் குழுக்களை அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாகப் பெய்த கடும்மழை யால் முதிரப்பெரியாறில் நீர்வரத்து அதிகரித்து தாழ்வான பகுதிகளுக் குள் வெள்ளம் புகுந்தது. நிலச்சரி வைத் தொடர்ந்து மூணாறு, மறையூர் பகுதியில் போக்குவரத்து தடை பட்டது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தி லுள்ள அணைக்கட்டுகளில் நீர்மட் டம் உயர்ந்துவருகிறது. முல்லைப் பெரியாறில் நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கை களுக்காக ராஜமலைக்கு ஹெலி காப்டர்களை வழங்கிட வேண்டுமென இந்திய விமானப்படையை முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்றொரு நிலச்சரிவு
இதற்கிடையில், பத்தனம்திட்டா வில் சபரிமலை மலை கோவிலுக்கு செல்லும் வழியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எர்ணாகுளம் மாவட்டத்தில், பெரியாறில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுவதால் ஆற்றங்கரை யில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கிவிட்டது. பெரியாறில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பல்வேறு அணைகள் திறக்கப்பட்டுள்ளன. தவிர, மாநிலத்தில் வெள்ளிக் கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் கேரள மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர் மழையால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து மழை பெய்துவருவ தால் மலப்புரம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங் களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.