tamilnadu

img

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

சென்னை, நவ.23- மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்ட தால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் ஆணையர் கூறுகையில், சென்னையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து சுமார் 3 லட்சம் கட்டிடங்க ளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சுமார் 2லட்சத்து 40 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது. கடந்த ஜூலையில் 7.28 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம், தற்போது 4.84 மீட்ட ராக உயர்ந்துள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை இதுவரை நிறுவாதவர்கள் விரைந்து நிறுவ வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.