tamilnadu

img

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீண்டாமை கொடுமை - நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

நாமக்கல், ஜூன் 19- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீண் டாமை கொடுமை அரங்கேறு வதை தடுத்து நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.  நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஒன்றியத்தில் 13 வார் டுகள் உள்ளன.  இதற்கிடையே ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ஒன்றியக்குழுத் தலைவர் அலுவல கம் திறக்க முடிவெடுக்கப்பட்டு கட்டடம் கட்டபட்டது.

இதன்படி அக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 12 ஆம் தேதியன்று  திறக்கப் பட்டது. இந்நிகழ்வையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கல்வெட்டும் அமைக்கப்பட்டது.  இதில், அகரம் ஊராட்சி மன்றத் தலைவரான லதா லட்சுமணகு மார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எலச்சி பாளையம் 5 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலரான சு.சுரேஷ் ஆகி யோரின் பெயர்கள் மட்டும் அச்சி டாமல்  திறப்புவிழா செய்யப்பட் டுள்ளது. இதேபோல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அடங்கிய கல் வெட்டியில் 5வது வார்டு கவுன்சி லர் சு.சுரேஷ் பெயரை கடைசியாக இடம்பெற்றுள்ளது.  

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் திட்டமிட்டு சாதிய ரீதியில் ஓரங் கட்டப்பட்டுள்ளனர். ஆகவே, இவர்கள் சாதீய ரீதியாக ஒதுக்கப் பட்டது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். ஏற்கனவே உள்ள கல் வெட்டை நீக்கி புதிய கல்வெட்டு அமைத்து வார்டு வாரியாக சாதிய பாகுபாடு இல்லாமல் பெயர் பலகை வைக்க வேண்டும். அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக ளில் ஒன்றியக் குழு உறுப்பின ருக்கு முறையான தகவல் தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் ஆகியோர் மாவட்ட ஆட் சியர் கா.மெகராஜிடம் மனு அளித் தனர்.

;