tamilnadu

பணியாளர்களுக்கு தினமும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் பரிசோதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி, ஜூன் 28- நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களும், தங் களது நிறுவனங்களில் பணிபுரியும் பணி யாளர்களை நாள்தோறும் தெர்மல் ஸ்கே னர் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் பரி சோதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள் ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளதாவது, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சையினால் 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத னைத்தொடர்ந்து சனியன்று உதகை புட்டு சாமி லைன், வி.எம்.காட்டேஜ், அலெக் ஸாண்டர் ஹவுஸ், திலகர் நகர் தூதூர்மட் டம், உதயம் நகர் குன்னூர், ராம்சந்த் கோத்த கிரி மற்றும் காமராஜர் நகர் ஆகிய பகுதிக ளில் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் தற்போது 26 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும், 16 பேர் உதகை அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 42 பேர் தொடர் சிகிச்சையில் உள் ளனர். தொடர்ந்து இப்பகுதிகளில் மேற் கொண்டு தொற்றுகள் உருவாகாத வண் ணம் புதியத் தொற்றுகள் கண்டறியப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் தங் களது நிறுவனங்களில் பணிபுரியும் பணி யாளர்களை தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் கொண்டு பரிசோதித்த பின்னரே பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். பரி சோதனையின்போது, நோய்தொற்று அறி குறிகள் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90 விழுக்காடு கீழ் இருப்பின் உடனடியாக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக இலவச கட் டுப்பாட்டு மைய எண்1077ல் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தனியார் நிறு வனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.