ஜல்லி கற்களாக காட்சியளிக்கும் தார்ச்சாலை
நாமக்கல், அக்.25- அகரம் கிராமத்தில் உள்ள தார்ச்சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்களாக காட்சியளிக்கிம் நிலையில், இச் சாலையை செப்பனிட்டு தார்ச்சாலையாக அமைக்கு மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கிராமத்திலிருந்து கொத்தம்பாளையம் வழியாக கருமா கவுண்டம்பாளையம், பெரிய மணலி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு சீரமைக் கப்பட்டது. இச்சாலை தரமானதாக அமைக்காததால் தற்போது அச்சாலை முற்றிலும் சேதமடைந்து ஜல்லிக் கற்களாக பெயர்ந்து காட்சியளிக்கிறது. இப் பகுதியின் மக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலை யாக இச்சாலை உள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத் திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தார்ச் சாலையை செப்பனிடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீயணைப்புத் துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு
கோவை, அக்.25- தீபாவளி நாளில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடி யாக அழைப்பதற்கு கோவை மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் அவசர உதவிக்கு எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி, 101 மற்றும் கோவை மாவட்ட தீய ணைப்பு அலுவலா் 94450 - 86306, உதவி மாவட்ட அலுவலா் 94450 - 86307 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். கோவை தெற்கு நிலையம் 0422 - 2300101, 94450 - 86311, கோவை வடக்கு 0422 - 2450101, 94450 - 86312, பீளமேடு 0422-2595101, 94450 - 86318, கணபதி 0422 - 2511001, 94450 - 86314, சூலூா் 0422 - 2689101, 89735 - 07060 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். கிணத்துக்கடவு 04259 - 296101, 94450 - 86310, பொள்ளாச்சி 04259 - 223333, 94450 - 86319, வால்பாறை 04253 - 222444,94450 - 86324, மேட்டுப்பாளையம் 04254 - 222299, 94450 - 86316, அன்னூா் 04254 - 264101, 94450 - 86535 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். கோவை மாவட்டம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 10 தீயணைப்பு நிலை யங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் தீயணைப்பு ஊா்தி களை அதன் குழுவினரோடு மற்றும் உரிய செயற் கருவிகளோடும் நிலை நிறுத்தம் செய்து, 250-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து விழிப் புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என தீய ணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.