tamilnadu

img

அழிவின் விளிம்பில் நாட்டு மாடுகள்...

ஒரு காலத்தில் நாட்டு மாடுகளின் இனம் 100க்கும் அதிகமாக இருந்தது. அது படிப்படியாக குறைந்து 35  இனமாக தற்போது குறைந்துள்ளது. இதே நிலை  நீடித்தால் நாட்டு இனங்களே இல்லாமல் போகும். களப்  பினத்தை சேர்ந்த ஜெர்சி மாடுகள் வெளிநாடுகளில் இருந்து  கொண்டுவரப்படுவதால், நாட்டு மாடுகளின் இனங் களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும் என்று உறுப்பினர் கருணாஸ் கோரினார். இதற்கு விளக்கம் அளித்த கால்நடை துறை  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,“ நாட்டு மாடு களை பாதுகாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து  வருகிறது. அதற்காக தற்போது தலைவாசலில் ஆசியா வில் மிகப் பெரிய அளவிலான கால்நடை பூங்கா அமைக்க  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காங்கேயம் காளைகளுக்  காக ஈரோடு மாவட்டம் பாவானி அருகே ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக் கட்டு போட்டி களில் நாட்டு இனம்தான் பங்கேற்கிறது. உம்பளச்சேரி இனம்  மட்டுமின்றி வெள்ளாடுகளையும் பாதுகாக்க அரசு தேவை யான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

;