tamilnadu

விசாரணையின் பெயரால் காவல்துறை தொல்லை... பனங்காலாவிளை மக்கள் எஸ்பியிடம் புகார்

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் கடையாலு மூடு அருகே பனங்காலவிளை ஊர் பொதுமக்களை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டு ஊர் மக்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கடையாலுமூடு பேரூராட்சியில் பனங்காலவிளை என்னும் ஊரில் நாங்கள் வசித்து வருகிறோம். கடந்த மாதம் ஒன்றாம் தேதியன்று கடையாலுமூடு தாஸ் மருத்துவமனையில் அபினேஷ் என்ற சிறுவனின் இறப்பு ஏற்பட்டது. அதற்குகாவல்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விஜிலா என்றசெவிலியரை தேடி காவல் துறையினர் பனங்காலாவிளைக்கு வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத நபர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கின்றனர். இதனால் எங்களுக்கு ஊரில் வசிக்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும் எங்களுக்குஎந்தவிதமான தொடர்பும் இல்லை. எனவே ஊரில்உள்ள வீடுகளுக்கு காவலர்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;