வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் முத்திருளப்பன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், வி.சி.க நகரச் செயலாளர் ரவீந்தரன், தி.க. நகரச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.