தரங்கம்பாடி, டிச.1- காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட மருந் தாளுநர் பணியிடங்களை நிரப்பிடு, அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக் கைகள் மீது அரசாணை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலை யங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மரூந்துகள் சேவைக் கழகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை அட்டைகளை அணிந்தவாறு நவம்பர்29 முதல் பணிக்கு சென்று வருகின்றனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் நடைபெற்ற கோரிக்கை அட்டை அணியும் இயக்கம் டிச.2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் நாகை, மயி லாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் உள்ளிட்ட பகுதி களில் 100 க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பங்கேற்றுள்ள தாக அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.ஜி.பாஸ்கரன் கூறியுள்ளார்.