tamilnadu

img

கிட்டியணை உப்பனாற்று கதவணை பணியை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யக் கோரிக்கை

சீர்காழி ஆக 3- கொள்ளிடம் அருகே கிட்டியணை உப்ப னாற்றின் குறுக்கே ரூ.100 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணியில் பயன்படுத் தப்படும் எம்சாண்ட் எனும் செயற்கை மணலை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கிட்டியணை உப்பனாற்றில் புதுப்பட்டினம் ஊராட்சி, தற்காஸ் கிராமத்தில் தமிழக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஆற்றில் 7.100 கிமீ தொலைவில் ரூ 977.42 லட்சம் மதிப்பீட்டில் நீரொழுங்கி (கதவணை) கட்டும் பணியில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அஸ்திவாரத்திற்காக தோண்டும் பள்ளத்தில் உப்பு நீர் கசிந்து வந்து கொண்டேயிருக்கிறது. தண்ணீர் கசிந்து கொண்டேயிருப்பதால் அஸ்திவாரத்திற்காக போடப்படும் சிமெண்ட் கான்கிரிட் மற்றும் ஜல்லி கலவையில், உப்பு நீர்  கலக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உப்பு நீர் சிமெண்ட் கான்கிரீட் கலவையில் கலக்காத வாறு நீரை முற்றிலும் வெளியேற்றினால் மட்டுமே அஸ்திவாரம் பலமாக இருக்கும்.  மேலும் ஆற்று மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இப்பாலம் கட்டும் பணிக்காக முழுக்க முழுக்க எம்சாண்ட் என்று சொல்லப்படும் செயற்கை மணலையே கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஆற்று மணலை மட்டுமே பயன்படுத்தி கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் கட்டி வந்தனர்.  தற்பொழுது ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் செயற்கை மணலை பயன்படுத்தி கட்டுமானத் தொழிலை செய்து வருகின்றனர். பெரிய அதிக மதிப்பீட்டில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கத வணையை உறுதியாக கட்ட வேண்டும் என்பது  மிகவும் அவசியமான ஒன்றாகிறது. எனவே பாலம் கட்டும் பணியை உயர் அதி காரிகள் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.  இக்கதவணையின் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்படும் எம்சாண்ட் எனும் செயற்கை மணலையும் கலப்படம் இல்லாமல் உள்ளதா என்பதனையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டே பின்பே கட்டுமான பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.