தரங்கம்பாடி, அக்.24- நாகை மாவட்டம், திருக் கடையூரில் நடவு செய்யப் பட்ட விளை நிலம் அருகி லேயே கழிவு நீரை லாரிகள் மூலம் கொட்டுவதால் சம்பா நடவு பாதிக்கப்பட்டு விட்ட தாக கூறப்படுகிறது. திருக்கடையூர் அம்ம ணாறு அருகேயுள்ள தமிழ்நாடு அரசு விதை பண்ணைக்கு சொந்தமான நிலங்களில் விதைகள் தயார் செய்ய நடவு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் விதை பண்ணைக்கு எதிரே உள்ள நிலங்களில் சம்பா சாகுபடி பணி மேற்கொண்டு வரும் நிலையில் திருக்கடை யூரில் உள்ள ஒரு சில தனி யார் தங்கும் விடுதிகள், உண வகங்களிலிருந்து பல்வேறு கழிவுநீரை டேங்கர் லாரிகள் மூலம் நடவு வயலையொட்டி கொட்டி வருகின்றனர். இதனால் பயிர்கள் நாச மாகி வருவதோடு, பணிக ளில் ஈடுபடும் தொழிலாளர்க ளும் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். உடனடியாக சுகாதார சீரழிவை ஏற்படுத்தும் வகை யில் கழிவு நீரை கொட்டி வருகின்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு இப்பகுதியில் உரிய கண்கா ணிப்பை மாவட்ட சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டு மென அப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.