நாகப்பட்டினம், மே 18- தோழர் கே.வரதராஜன் மறை விற்கு, சி.பி.எம். நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், தலை ஞாயிறு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சி.பி.எம். தலை ஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ. வேணு தலைமை வகித்தார். தோழர் கே.வரதராஜன் உருவப் படத்தை, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் திறந்து வைத்துப் புகழுரை யாற்றினார். கே.அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரடாச்சேரி ஒன்றியம்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அரசவனங்காடு பேருந்து நிலையம் அருகே தோழர் கே.வரத ராசன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தோழர் கே.வரதராஜன் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து இரங்கல் உரை ஆற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.தம்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.மணியன், டி.ஜெயபால், கே.கோபிராஜ், சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவர் சுலேக்சனா லோகநாதன் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.