tamilnadu

மயிலாடுதுறை, தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

ஏவிசி கல்லூரி தேர்வு முடிவுகள்

மயிலாடுதுறை, டிச.12- மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் நடந்த பருவத்தேர்வு முடிவுகள் டிச.13 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் வெளியிடப்படும். பருவத் தேர்வு முடிவுகளை www.avccollege.net என்ற இணையதள முகவரி யிலும் காணலாம். மேலும் பருவத்துணைத் தேர்வுகள் (ஜனவரி-2020) விண்ணப் பிக்க கடைசி நாள் டிச.27-ம் தேதி என கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தெரிவித் துள்ளார்.

காவலன்  செயலி  விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், டிச.12- தஞ்சை மாவட்ட காவல் துறை சார்பில், தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சி யார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி தொடர் பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை சரகக் காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், கல்லூரி முதல்வர் அ.திருவள்ளுவர், காவல்துறை துணை கண் காணிப்பாளர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர் சந்திரா, பேரா சிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.