tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் புத்தூர் சிறப்பு பள்ளிக் கட்டடம் 

 சீர்காழி, செப்.9- புத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கான வகுப்பறைக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அனைவ ருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு கட்டிடங்கள் அருகருகே கட்டப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் 24 பேர் கல்வி பயின்று வருகின்ற னர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாற்றுத்திறனாளி களுக்காக இயங்கி வரும் இந்த வகுப்பறைக் கட்டிடங்கள் இரண்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.  சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் கட்டிடத்தின் உள் புறத்தில் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் விழுந்துள்ளதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்து டனையே வகுப்பறைக்கு வந்து செல்கின்றனர். இரண்டு வகுப்பறைகள் கொண்ட மற்றுமொரு கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் அமர்ந்து பயன் அடைந்து வரும் இந்த பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் காரைகள் திடீரென பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாற்றுத்திற னாளிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த வகுப்ப றைக் கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

;