tamilnadu

img

கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

 தரங்கம்பாடி: நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா வெள்ளியன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தாளாளரும், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் பேராயர் டேனியல் ஜெயராஜ், செயலர் மெகர் ஆண்டனி ,த.சு.லு.தி துணைத்தலைவர் ஜேக்கப் சுந்தர்சிங், துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார்,ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் பாடல்களை பாடி, நாடகங்கள், நடனங்களை நிகழ்த்தி மாணவர்கள் அசத்தினர். செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமையில் சனியன்று நடைபெற்றது. கிறிஸ்துவின் பிறப்பை குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டும் மாணவர்கள் கொண்டாடினர். நிறுவத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.