நாகப்பட்டினம், ஜூலை 18- தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் வேளா ண்மை இணை இயக்குநர் அலுவல கத்தின் முன்பு புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோட்டக்கலைத் துணை இயக்கு நர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நியமிக்க வேண்டும், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவி யாளர், ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு தட்டச்சர் உள்ளிட்ட பணி யிடங்கள் உருவாக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பாலவேல் முரளி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சுதாகர் விளக்கவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன் சேரல், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.டி.அன்பழகன் நிறைவுரை யாற்றினார். கல்யாண்குமார் நன்றி கூறி னார்.