tamilnadu

ஒரு போலிச்சாமியாரும் ஏழு உயிர்களும்

தமிழ்நாடு முழுவதும் சித்திரை மாதம் திருவிழாக் காலமாகும்! அறுவடை முழுவதும் முடிந்து உழவர் பெரு மக்களின் இல்லங்களில் தானியக்குதிர்கள் நிரம்பிய காலத்தில் திருவிழாக்கள் கொண்டாடதுவங்கியது தமிழ்ச் சமூகம்!குளிர் காலம் நிறைவடைந்து இலையுதிர் காலத்தின்வெக்கையை தணித்துக் கொள்ள மன்னர்கள் காலத்திலிருந்தே கோவில் திருவிழாக்கள் களைகட்டி கொண்டாடப்படுவதும் பல்லாயிரம் மக்கள் பங்கேற்பதும் தமிழர் மரபில் புதிதான ஒன்றல்ல!அறிவியல் வளர்ச்சி பெற்ற நவீன யுகத்தில் தான் கும்பல் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு என்ற புதிய பரிமாணம் தமிழகத்தை கவலை கொள்ள வைத்துள்ளது.


இதுவும் 1992 ல்முன்னாள் முதல்வர் கும்பகோணம் மகாமக திருவிழாவில் நீராடிய போது வேடிக்கை பார்க்கபோன கும்பலில் சிக்கி தள்ளுமுள்ளானதில் 60 பேர் பலியான சம்பவத்தை தமிழகம் மறந்திருக்க முடியாது!ஆனால் தமிழக அரசு மறந்து விட்டது! ஒரு துயரமான சம்பவத்திலிருந்து தகுந்த பாடம் கற்கவில்லை என்பதேதற்போதைய சமூகத்தை உலுக்கும் ஏழு பேர் உயிர்ப் பலி!திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. க்கு அருகாமையில் இருக்கும் கிராமம் தான்முத்தையாபாளையம். இங்குள்ள பெரிய கருப்பசாமி கோயிலில் தனபால் சாமியார் பக்தர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக குறி சொல்லி வந்துள்ளார். தமிழ்நாட்டின் சரி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து செவ்வாய்,வெள்ளிக்கிழமைக்கு குறி கேட்க ஏராளமான பக்தர்கள்வந்து சென்றுள்ளனர். 


பொய்யை நம்பி குவிந்த பக்தர்கள் 


இந்த சாமியாரிடம் துறையூர் பகுதி பக்தர்கள் பெரும்பாலும் குறி கேட்கச் செல்வது இல்லை. உள்ளூர் பக்தர்களைஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த சாமியார்உள்ளூர்வாசிகளுக்கு குறி சொன்னா பலிக்காது, கருப்பசாமி ஒத்துக்கல என்றும் நம்ப வைத்து, வெளியூர் பக்தர்களை இலக்காக வைத்து அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் தனபால் பூசாரி, பூஜை செய்து வந்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சித்திரா பௌர்ணமிதிருவிழாவை முன்னிட்டு பிடி காசு கொடுக்கும் வைபவம்நடத்திட அறிவிப்பு செய்யப்பட்டது. கருப்பு கோவிலில் பிடிகாசு பெற்று தங்கள் வீட்டில் வைத்து வழிபட்டு அந்தகாசையும் சேர்த்து வீடு, நிலம்தொழிலோ வியாபாரமோ செய்தால் செல்வம் பெருகும் என போலிச் சாமியார் தனபால் அளந்துவிட்ட பொய்யை நம்பியே பக்தர்கள் குவிந்தனர். இதற்கு முந்தைய இரண்டு நாட்கள் குறி சொல்லும்திருவிழாவும், மூன்றாவது நாள் காலை5.30 மணி முதல்“பிடி காசு”வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் முதல் நாள் இரவே வந்து கருப்புக் கோவிலில் தங்கிக்கொண்டனர். ஆனால் 7.30 மணிக்கு தான் பிடிகாசு கொடுக்க தொடங்கியுள்ளனர்.காலதாமதமாக தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.இந்த நிலையில் காலை 8.45 மணியளவில் பிடிகாசு தீரப் போகிறது என்று புரளி கிளம்பியுள்ளது. இதனால் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு பிடிகாசுவாங்க ஓடியுள்ளனர். இந்த நேரத்தில் தான் நெரிசலில்சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.


அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த நூறுக்கும் மேற்பட்ட போலீசார் கூட்டத்தை வரிசையில் நிறுத்தி ஒழுங்குபடுத்தியிருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும்.ஏழு பேர் மரணித்து பூமியில் விழுந்து கிடந்த போதும் 2மணி நேரத்திற்கும் மேலாக போலிச் சாமியார் பக்தர்களுக்கு பிடிகாசு கொடுப்பதை நிறுத்தவில்லை.திருச்சியிலிருந்து மாவட்ட ஆட்சியர், காவல்துறைஐஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகே பிடிகாசுநிகழ்ச்சி நிறுத்தப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள்! அதுவரையில் காவல்துறையும் வருவாய்த்துறையும் செய்வதறியாது கைகட்டி நின்றது.


இலைச்சோற்றில் முழுப்பூசணிக்காய்...


திருவிழா நிகழ்ச்சி நிரல் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு முன்பே தெரியும். மேலும் பத்தாண்டுகளுக்கு மேலாக நடைபெறும் நிகழ்ச்சி என்பதும் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதும் அதிகாரவர்க்கத்திற்கு தெரியும். எல்லாம் தெரிந்தே பாதுகாப்புபணியில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைவருக்கும் தெரியாமல் நடந்ததாக திருச்சி மாவட்ட கலெக்டர் கூறியிருப்பது இலைச் சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைப்பதற்கு சமமாகும். கோவில் அமைந்துள்ள பகுதியை முன்னரே ஆய்வு செய்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள மாவட்டநிர்வாகம் எந்த முயற்சியும் செய்யவில்லை. 50,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடும் திருவிழா நடைபெறும் பகுதிகளில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை,தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து ஒழுங்குபடுத்தவில்லை. கோவில் பகுதியில் மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ், தீயணைப்பு எந்திரம் மற்றும் நெரிசல் மற்றும் தீ விபத்துக்களில் தப்பிக்க அவசர தொழில் நுட்ப உதவிகள் எதுவும் செய்யப்படவில்லை.பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் இருந்தாலும் கும்பல் நெரிசலில் பாதிக்கப்படும் போதுஅதனை எப்படி கட்டுப்படுத்துவது என்ற அடிப்படை பயிற்சியும் தொழில்நுட்பமும் இல்லாமல் கையறு நிலையில் இருந்ததால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


மூடி மறைக்கும் முயற்சி


போலிச் சாமியார் தனபால் கைது செய்யப்பட்டதோடும், மத்திய, மாநில அரசின் குறைந்தபட்ச நிவாரணம் அறிவித்து அப்பாவி பக்தர்கள் உயிழப்பை தமிழக அரசுஊத்தி மூட பார்க்கிறது. பல்லாயிரம் மக்கள் கூடும் திருவிழாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாத மாவட்ட நிர்வாகம் தான் குற்றவாளி ஆகும். கோவில் ஒலிபெருக்கிகள் மூலமாகவோ, காவல்துறை வாகனத்தின் ஒலி பெருக்கி மூலமாகவோ பிடிகாசு எல்லோருக்கும் வழங்கப்படும், அமைதியாக வரிசையில் வரவும், தள்ளுமுள்ளு செய்பவர் பீதியை பரப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகளை காவல்துறையும் வருவாய்த்துறை அதிகாரிகளும் எச்சரிக்கையாக செய்துஇருந்தாலே நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் எதையும் எந்த அதிகாரிகளும் செய்திடவில்லை. அரை லட்சம் மக்களுக்கு மேல் கூடும் இடத்தில்சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர், வருவாய் தாசில்தார் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் இல்லாததே வதந்திக்கும் விபத்துக்கும்காரணமாக அமைந்துவிட்டது. 


எழும் கேள்விகள்


எல்லாவற்றுக்கும் மேலாக காவல்துறை உளவுப் பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு எல்லாம் பாதுகாப்பு பணியில்

சுணக்கம் காட்டியது ஏன்?


போலிச் சாமியார் ஒருவர் அரசின் அனுமதி பெறாமல்ஆண்டு தோறும் இத்தகைய விழாக்களை எப்படி நடத்திட

மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது?


விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நடவடிக்கைகளை கவனிக்காதது ஏன்?


நூறுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் இருந்தும்கலெக்டர் கருத்துப்படி முறையான அனுமதி இல்லாமல் நடக்கும் விழா என்றால் விழாவை ஏன் ரத்து செய்யவில்லை?


மூன்று தினங்களுக்கும் பாதுகாப்பு தந்து போலீசாரை அனுப்பியது ஏன்? இது போன்ற கேள்விகள் நிறைய எழுகின்றன.   மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கோவில்

வளாகத்தில் இருந்திருந்தால் உயர் பாதுகாப்பு தந்திருக்க முடியும். வதந்தியை தடுத்திருக்க முடியும். 


ட எல்லாவற்றுக்கும் மேலாக காவல்துறை உளவுப் பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு எல்லாம் பாதுகாப்பு பணியில்சுணக்கம் காட்டியது ஏன்?ட போலிச் சாமியார் ஒருவர் அரசின் அனுமதி பெறாமல்ஆண்டு தோறும் இத்தகைய விழாக்களை எப்படி நடத்திடமாவட்ட நிர்வாகம் அனுமதித்தது?ட விழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நடவடிக்கைகளை கவனிக்காதது ஏன்?ட நூறுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் இருந்தும்கலெக்டர் கருத்துப்படி முறையான அனுமதி இல்லாமல் நடக்கும் விழா என்றால் விழாவை ஏன் ரத்து செய்யவில்லை?ட மூன்று தினங்களுக்கும் பாதுகாப்பு தந்து போலீசாரை அனுப்பியது ஏன்?இது போன்ற கேள்விகள் நிறைய எழுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கோவில்வளாகத்தில் இருந்திருந்தால் உயர் பாதுகாப்பு தந்திருக்கமுடியும். வதந்தியை தடுத்திருக்க முடியும். 


விசாரணைக்குழு


எனவே பாதுகாப்புப் பணியின் பின்னடைவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட விசாரணைக்குழு அமைக்க வேண்டும். திருச்சி உள்ளிட்டு தமிழ்நாடு முழுவதும் போலிச் சாமியார்கள் ஏராளமானோர் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து ஆசிரமங்களும் , கோவிலும் கட்டிக்கொண்டு அப்பாவி பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதைதடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை, தொழில் நுட்பம், உடல் ஆரோக்கியம், குழந்தையின்மை, திருமணம் ஆகாமை , செல்வம் சேர்க்கும் பேராசை காரணமாகவே தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியாமல், நெருக்கடி தீரவே போலிச் சாமியார்களை நம்பி பக்தர்கள் மோசம் போகின்றனர். இந்த நிகழ்வுகள் தொடர் நிகழ்வாக தமிழகம் முழுவதும் நடந்தாலும் போலிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி எடப்பாடி அரசுக்குஇல்லாததே இத்தகைய உயிரிழப்புகள் நடந்துள்ளது!இனிமேலாவது ஆட்சியாளர்களுக்கு புத்தி வந்தால் சமூகம் நலம் பெறும். 


கட்டுரையாளர்: மாநிலச் செயலாளர், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், திருச்சி.







;