tamilnadu

img

வெள்ளிமலைப் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம்..

தேனி:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள வனப்பகுதி கண்டமனூர், வருஷநாடு, மேகமலை ஆகியமூன்று வனச்சரகங்களாக பிரிக்கப்பட் டுள்ளது. வனப்பகுதிக்குள் அரசரடி, வெள்ளி மலை, பொம்முராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வனப்பகுதியில் உள்ள சிறுசிறு ஓடைகளில் தற்போது வரை நீர்வரத்துஉள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்ற யானை கூட்டங்கள் தற்போது வெள்ளிமலை வனப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. யானைகள் நடமாட்டம்அதிகளவில் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.