tamilnadu

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக அறிவியல் இயக்கம் போராட்டம்

தேனி:
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசுகல்விக்கொள்கையை  நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தி தேனியில் அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்டத்தலைவர் மகேஷ், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டப் பொருளாளர் மணிமேகலை மற்றும் ஜெகநாதன், கமல், காளிதாஸ், முத்துக்கண்ணன், வெங்கட்ராமன், சதீஷ், முத்துப்பாண்டி ஆகியோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆசிரியர்கள், குழந்தைகள் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பியக்க வாசகங்களை ஏந்தியபடி புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, இணையவழிக் கருத்தரங்குகள், மின்னஞ்சல் இயக்கம் போன்றவற்றை நடத்தவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.
 

;