tamilnadu

போடியில் அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது  

போடி, பிப்.4-     போடியில் நடைபெறும் கனிம வள திருட்டைத் தடுக்க  போடி நகர்  காவல் துறையினர் ரோந்து  சென்றனர். போடி-மூணாறு சாலையில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி அருகே  வந்த டிராக்டரை நிறுத்தி  சோதனை செய்தனர். அப்போது டிராக்டரில் அனுமதியின்றி கொட்டகுடி  ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தது தெரிந்தது. விசாரணையில் டிராக்டரில் மணல் அள்ளி வந்தது போடி சுப்பு ராஜ் நகரை சேர்ந்த ஜெகதீஸ்வரன், ஓட்டுநர் தங்கப்பாண்டி (40)  என்பது தெரிந்தது. காவலர்கள் விசாரித்துக் கொண்டிருக்கையில ஜெகதீஸ்வரன் தப்பியோடிவிட்டார். தங்கபாண்டி பிடிபட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தங்கபாண்டியை கைது  செய்து சிறையில் அடைத்தனர். டிராக்டரை பறிமுதல் செய்யப்பட்டது. ஜெகதீஸ்வரனை தேடி வருகின்றனர்.