tamilnadu

img

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம்....

தேனி:
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில்   ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதுஉள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது . 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழுக்கூட்டம் தேனி அருகே அரண்மனைப்புதூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின்  மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார் . பள்ளி ஆசிரியர் தேசிய கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன்னிலை வகித்தார். தேனி மாவட்டச் செயலாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார்.மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
கள் குறித்து மாநில பொதுச் செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதனை தமிழகஅரசு நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் நியமன வயதை 40ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப்பெறவேண் டும். இதனால் ஆசிரியர் படிப்பு படிக்கும் பலரது வேலைவாய்ப்புபறிபோகும்.இடைநிலை ஆசிரியர்களிட மிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும் . அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கை சதவீதத்தை 7.5 சதவீதத்தில் இருந்து10 சதவீதமாக உயர்த்தவேண்டும். உதவி பெறும் பள்ளி   மாணவர்களுக்கு தனியே 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்.சித்திக் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு ஆசிரியர், அரசு ஊழியர் ஊதியமுரண்பாடுகளை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கையை வலியுறுத்தி3 கட்டப் போராட்டங் களை நடத்த முடிவு செய்துள்ளோம்.டிசம்பர் 17ம் தேதி வட்டார அளவிலும், ஜனவரி 9ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெறும்.  மார்ச்சில் சென்னையில் 10ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம்பாண்டியன், ராமர், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.

;