tamilnadu

img

விவசாயத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர், ஜூன் 28-  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை வியாபாரி களான ஜெயராஜ் அவரது மகன் பொன் னிக்ஸ் ஆகியோரை அடித்து கொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். அரசு ஒரு கோடி நிவாரணம் வழங்க வலி யுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் அகிய இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட செய லாளர் கே.அருள்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெரு மாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்டத் தலைவர் டி.முத்துச்சாமி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்-.முனியப்பன், சவடமுத்து, சிக்கணன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கொரோனா காலத்தில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும். கொரோனா கால நிவாரண நிதியாக குடும் பத்திற்கு தலா ரூ 12500 அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

;