tamilnadu

காலத்தை வென்றவர்கள் - சென்னை துறைமுகத் தியாகிகள் தினம்

சென்னை துறைமுகத் தியாகிகள் தினம்

நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதை அமல்படுத்த நிர்வாகம் முனைவதில்லை. அப்படித்தான் தொழிலாளர்களுக்கு ஆதரவான ஒரு நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தும் சென்னை துறைமுகம் நிர்வாகம் அத்தீர்ப்பை அமல்படுத்தாமல் அழிச்சாட்டியம் செய்தது. வெகுண்டெழுந்த சென்னை துறைமுகத் தொழிலாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்தனர். சுதந்திர இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக்கூட வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய அவலநிலை இருந்தது வேதனையானது.

வீரம் மிக்க அப்போராட்டத்தை ஒடுக்க வழக்கம்போல் தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவியது.  1958-ஜுன் 16 அன்று போராடிய சென்னை துறைமுகத் தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் கோபால், வேதாச்சலம், அப்துல் வகாப், நடராஜன், எத்திராஜ், மணி ஆகிய ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அந்த ஆறு தோழர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. எந்த ஒரு உரிமையும் அரசு தாமாகவே வழங்கியதாக வரலாறில்லை.மாறாக அரசின் வலிய கரங்களிலிருந்து உழைக்கும் மக்களின் போராட்டங்களால் பறிக்கப்பட்டவை என்பதில் ஐயமில்லை.

;